புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் இலங்கை மற்றும் தெற்கு தமிழ்நாடு கடலோர பகுதியில் இடையே வரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

இதன் காரணமாக, நவம்பர் 25 முதல் நவம்பர் 28 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், இன்று மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nov 25 rain update


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->