மேற்கூரை சரிந்த விவகாரம்.. ஒப்பந்ததாரருக்கு பறந்த நோட்டீஸ்..!! நெல்லை மாநகராட்சி ஆணையர் அதிரடி..!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மேற்கூரை நேற்று பெய்த 30 நிமிடம் மழைக்கே இடிந்து விழுந்தது. இந்த விவகாரம் அரசியல் ரீதியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தம் என திமுகவினரும், அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்திற்கு பிறகு திமுக ஆட்சியில் தான் மொத்த பணிகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் வ.உ.சி மைதான மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரருக்கு நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் மைதானத்தின் மேற்கூரை கட்டி முடிக்கப்பட்டு 8 மாதங்களில் மேற்கூரை இடிந்தது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இடிந்து விழுந்த மேற்கூறையை ஆய்வு செய்ய உள்ளனர்.

மேற்கூரை இடிந்தது தொடர்பாக தகுந்த காரணத்தை எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கேலரியின் மேற்கூரை தரம் குறித்து பொறியியல் வல்லுனர் அதிகாரி பாண்டுரங்கன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Notice to contractor regarding roof collapse issue of VOC ground


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->