கருப்பொருளை மீறி வேறு எதுவும் பேசக்கூடாது..விசிகவினர்களுக்கு திருமாவளவன் கட்டுப்பாடு! - Seithipunal
Seithipunal


என் மீதான விமர்சனத்திற்கு விளக்கம் தர நான் தயாராக இருக்கிறேன். எனவே, கட்சியினர் யாரும் அதுகுறித்து பேச வேண்டாம். எந்த தலைவரையும் அவமதிக்கும் நோக்கம் நமக்கு கிடையாது என்று  திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வீடியோ வெளியிட்டு பேசியதாவது:-ஆணவ கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 9-ந் தேதி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  மதச்சார்பின்மையை காப்போம் பேரணியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து மட்டுமே பேச வேண்டும்.  நம்முடைய கருப்பொருளை மீறி வேறு எதுவும் பேசக்கூடாது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை நான் அவமதிக்கும் வகையில் பேசிவிட்டேன் என்று கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். அதற்கு என் மீதான விமர்சனத்திற்கு விளக்கம் தர நான் தயாராக இருக்கிறேன். எனவே, கட்சியினர் யாரும் அதுகுறித்து பேச வேண்டாம். 

 எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை யாரும் விமர்சிப்பது கிடையாது என்று கூறினேன். திராவிட எதிர்ப்பு என்றாலே அது கருணாநிதி எதிர்ப்பு என்று மட்டுமே விளக்கினேன். என்னுடைய அரசியலும் கருணாநிதியை எதிர்த்து தான் இருந்தது என்று தி.மு.க. கூட்டத்தில் கூறினேன்.

ஆனால், நான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை அவமதிக்கும் நோக்கில் பேசிவிட்டதாக கட்டமைக்கப் பார்க்கிறார்கள். எனவே, அவர்கள் எதுவேண்டுமானாலும் பேசிவிட்டு போகட்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் இதுகுறித்து பேச வேண்டாம். . இவ்வாறு அவர் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nothing else should be talked about apart from the main subject Thirumavalavan has control over the Vishikavins


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->