ஈரோடு, திருப்பூரில் இடைவிடாது மழை: தாழ்வு பகுதிகளில் பெருக்கெடுத்தோடிய வெள்ளம்; மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு..! - Seithipunal
Seithipunal


ஈரோடு மற்றும் திருப்பூரில் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்வு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று காலை முதலே ஈரோடு நகரில் வானம் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனை தொடர்ந்து, மதியம் 1.30 மணியளவில் லேசான காற்று மற்றும் இடியுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த மழையால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கனமழை காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து அவ்வப்போது விட்டுவிட்டு மழை தூறியது. இதனால் இரவு முழுவதும் குளிர்ச்சியான கால நிலை நிலவியதோடு, தொடர்ந்து இரவிலும் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. மேலும், இன்று அதிகாலையிலும் ஈரோடு நகரில் மிதமான மழை பெய்தது. தொடர்ந்து வானம் இருள் சூழ்ந்த காணப்பட்டது. சிறிது நேர இடைவெளிக்கு பின்னர், மீண்டும் காலை 08.30 மணியளவில் லேசாக மழை பெய்ய தொடங்கிய மழை சீராக பெய்து கொண்டே இருந்தது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாத நிலையில் மழையில் நனைந்தவாறு மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றனர். தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்தத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இன்று காலை 08 மணி நிலவரப்படி ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு: 

ஈரோடு-42, மொடக்குறிச்சி 87, கொடுமுடி 59.20, பெருந்துறை 42, சென்னிமலை-18.40, பவானி 13, கவுந்தப்பாடி-7.20, கோபி 11.20, எலந்தக்குட்டை மேடு 21.40, கொடிவேரி அணை 12, குண்டேரிபள்ளம் அணை 7.40, நம்பியூர்-17, சத்தியமங்கலம் 18, பவானிசாகர் அணை 5.20, தாளவாடி-20 என மொத்தம் 381 மி.மீ மழை பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக மொடக்குறிச்சியில் 87 மி.மீ மழை பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Normal life of people in Erode and Tiruppur is severely affected due to rain


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->