ஆப்கானிஸ்தான் மக்கள் இந்தியாவில் சிகிச்சை பெரும் வகையில் மருத்துவ விசா சேவைகள்: அல்ஹாஜ் நூருதின் அஜிஜி அறிவிப்பு..!
Visa services for Afghans to start treatment in India
இந்தியா உடனான வர்த்தகம் மற்றும் முதலீடுக்கான உறவை மேம்படுத்தும் வகையில் ஆப்கானிஸ்தான் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அல்ஹாஜ் நூருதின் அஜிஜி -5 நாள் பயணமாக புது டில்லி வந்துள்ளார்.
புதுடில்லியில் அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியுள்ளதாவது:
மருத்துவ சேவைகளுக்காக இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையே விசா சேவைகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆப்கான் நாட்டில் உள்ள நோயாளிகள் சிகிச்சைக்காக இந்தியா வருவதை உறுதி செய்ய நாங்கள் முயற்சிப்போம் என்றும், அவர்களுக்கான வசதிகளை அளிப்பதில் தூதரகம் முக்கிய பங்கு வகிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக காபூலில் உள்ள இந்திய தூதரகம் அதற்கான திட்டங்களை உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளார். ஆப்கான் வங்கித்துறையில் சில சிக்கல்கள் இருக்கின்ற நிலையிலும், அந்நாட்டில் உள்ள அரசு வங்கிகள், தனியார் வங்கிகள் இரண்டும் வர்த்தகத்திற்காக சிறப்பான சேவையை அளித்து வருகின்றதாகவும், வணிகத்திற்கு தேவையான விஷயங்களில் வெளிப்படையாகவே உள்ளோம் என்று ஆப்கான் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், வங்கித்துறையில் மத்திய ஆசிய நாடுகள் உடன் நல்ல உறவை கடைபிடித்து வருகிறதாகவும், இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே உள்ள சின்ன சின்ன சிக்கல்கள் உள்ளன. அவர் விரைவில் தீர்க்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும், வங்கித் துறையில் கூடுதல் வசதிகளை வழங்குவதே எங்கள் கவலையாக இருக்கிறது என்றும், அவை வேண்டும் என்று இரு தரப்பிலிருந்தும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ஆப்கான் அமைச்சர் அல்ஹாஜ் நூருதின் அஜிஜி நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.
English Summary
Visa services for Afghans to start treatment in India