தெரு நாய்களை கட்டுப்படுத்த எந்த அமைப்பும் இடையூறாக இருக்க கூடாது..அதிமுக உரிமை மீட்பு குழு வேண்டுகோள்!
No organization should interfere in controlling street dogs DMKs rights restoration team appeal
தெரு நாய்களை கட்டுப்படுத்த எந்த அமைப்பு இடையூறாக இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் உடனடியாக தெருநாய்களை அப்புறப்படுத்தி காப்பகங்களில் அடைக்க வேண்டும் என அதிமுக உரிமை மீட்பு குழு வலியுறுத்தியுள்ளது.
அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் திரு ஓம்சக்தி சேகர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது .டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும். இதனை தடுக்கும் எந்தவொரு அமைப்பின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் நாய்க்கடி மற்றும் ரேபிஸ் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இது குறித்த செய்தி அறிக்கையை கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவு பின்பற்றி உடனடியாக தெரு நாய்களை கட்டுபடுத்த வேண்டும் என்றும்.இனிமேல் தெரு நாய் கடித்து யாரும் பாதிக்கப்படக்கூடாது என்று பல்வேறு மாநிலங்களில் மக்கள் அந்தந்த பகுதி மக்கள் கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை முன்னிறுத்தி பல மாநிலங்கள் தெரு நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.
புதுச்சேரி மாநிலத்திலும் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து நாள்தோறும் தெரு நாய் கடித்து இதனால் பாதிப்புக்குள்ளானோர் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு பொது மருத்துவமனையிலும் ஊசி போட்டு சிகிச்சை பெறும் நிலை உள்ளது.
தெரு நாய்களின் பிரச்சனை அதிகரிக்கும் போதெல்லாம் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் விலங்கு நல ஆர்வலர்களை காரணம் காட்டி தங்கள் பணிகளை தட்டிக் கழித்து வந்தனர்.
ஆனால் தற்போது உச்சநீதிமன்றம் நீதிபதிகளே விலங்கு ஆர்வலர்களால் வெறி நாய்க்கடிக்கு இரையானவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா? ஒரு சில நாய் பிரியர்களுக்காக எங்கள் குழந்தைகளை நாங்கள் பலியிட முடியாது” என்று தங்களின் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
எந்த அமைப்பு இடையூறாக இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் உடனடியாக தெருநாய்களை அப்புறப்படுத்தி காப்பகங்களில் அடைக்க வேண்டும். மேலும் காப்பகங்களில் இருந்து நாய்கள் வெளியேறாமல் இருப்பதை சம்பந்தப்பட்ட துறையினர் உறுதி செய்ய வேண்டும்.
மேலும் புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு துறைகளுக்கு அவசர எண்கள் இருப்பது போல தெரு நாய்களின் தொல்லைகளை நீக்க ஒரு ஹெல்ப்லைனை உடனடியாக புதுச்சேரி அரசு நிறுவ வேண்டும்.
புதுவை மாநில நலன் சார்ந்த இந்த கோரிக்கை மீது உடனடியாக புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் திரு ஓம்சக்தி சேகர் தெரிவித்துள்ளார்.
English Summary
No organization should interfere in controlling street dogs DMKs rights restoration team appeal