அதிமுகவுடன் கூட்டணி இல்லை.! அதிமுக,திமுக ரெண்டுமே ஒன்றுதான்! எடப்பாடி கனவில் மண்ணை அள்ளிப்போட்ட விஜய்!
No alliance with AIADMK AIADMK and DMK are one and the same Vijay has shattered Edappadi dream
அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் ஒருபோதும் இணைய மாட்டோம் என தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய் தெளிவாக தெரிவித்துள்ளார். முதல்வர் வேட்பாளராக தன்னை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம் என்றும், தவெகவின் ஒரே இலக்கு திமுகவை வீழ்த்துவதே என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆகஸ்ட் 21 அன்று மதுரையில் நடைபெறவுள்ள தவெகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டுக்கான பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தென் மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் 500 ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் இம்மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தவெகவினர் பங்கேற்பார்கள் என கட்சியினர் கூறுகின்றனர். மாநாட்டின் ஏற்பாடுகளை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னின்று கவனித்து வருகிறார்.
“மாற்றமே என் இலக்கு” – விஜய்
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளருடன் பேசிய விஜய்,“எனக்கு எதிரான விமர்சனங்கள் என்னை பாதிக்காது. மாற்றத்தை நோக்கியே என் பயணம். அதிமுக–பாஜக கூட்டணியில் இணையுவதற்கே இடமில்லை. பாஜகவுடன் எந்த காரணத்தாலும் கூட்டணி அமைக்க மாட்டோம். முதல்வர் வேட்பாளராக என்னை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி இருக்கும்,”
என்று கூறினார்.
தவெகவின் முதன்மை நோக்கம் திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே என அவர் தெரிவித்தார்.
தனித்துப் போட்டியிடும் வாய்ப்பு அதிகம்
திமுக மற்றும் அதிமுக இரண்டும் பெரிய அளவில் கூட்டணிகளை அமைத்துள்ள நிலையில், தவெக இம்முறை தனித்துப் போட்டியிடும் வாய்ப்பு அதிகம் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. இதனை தவெக தொண்டர்களும் விரும்புவதாக கூறப்படுகிறது.
English Summary
No alliance with AIADMK AIADMK and DMK are one and the same Vijay has shattered Edappadi dream