நிமிஷா பிரியா விவகாரம்: கைவிரித்த மத்திய அரசு!
Nimisha Priya issue The central government has stepped back
ஏமனில் மரண தண்டனைக்கு உள்ளாகியுள்ள கேரளா செவிலியர் நிமிஷா பிரியா விவகாரத்தில், "மத்திய அரசு தனக்கான எல்லைக்குள் அனைத்து முயற்சிகளையும் செய்துவிட்டது" என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாலக்காட்டைச் சேர்ந்த 38 வயதான நிமிஷா பிரியா, ஏமனில் செவிலியராக பணியாற்றி வந்தார். அங்கு தலால் அப்டோ மெஹ்தி என்ற ஏமன் நாட்டு நபரை விஷ ஊசி போட்டுக் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏமன் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.தூக்கு தண்டனை ஜூலை 16-ஆம் தேதி நிறைவேற்றப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனையை தடுத்து நிறுத்தக் கோரி, நிமிஷா பிரியாவின் குடும்பத்தினர் சார்பில் இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சிபிஐ வழக்கறிஞர், மத்திய அரசு இந்த விவகாரத்தில் ஏமன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், வழக்கறிஞரின் ஊடாக மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இதையடுத்து மத்திய அரசு தரப்பு விளக்கம்:“எந்த எல்லை வரை செல்ல முடிகிறதோ அந்த எல்லை வரை மத்திய அரசு சென்றது. ஏமன் அரசு இதைத் தடுக்க விருப்பம் காட்டவில்லை. மரண தண்டனையை தள்ளி வைக்கப்படும் என்ற தகவல் வந்திருந்தாலும், அது உறுதியாக முடியவில்லை. இப்போதைய நிலைமையில், இந்திய அரசு சட்டரீதியான வரம்புகளுக்கு அப்பால் எதையும் செய்ய இயலாது.” அது ஒரு தனிப்பட்ட பேச்சுவார்த்தையாக மட்டுமே இருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.இந்த விவகாரம் மீதான விசாரணை தொடருவதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
English Summary
Nimisha Priya issue The central government has stepped back