கர்ப்பிணி பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிய விவகாரம்: குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை..!
Convict sentenced to life in prison for pushing pregnant woman off train
திருப்பதி ரயிலில் பலாத்கார முயற்சியின் போது ஹேமராஜூ என்பவர் கர்ப்பிணியை கீழே தள்ளியதில் தலையில் பலத்த காயத்துடன், கை, கால் முறிந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளியான ஹேமராஜூக்கு சாகும் வரை தண்டனை விதித்து திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த 35 வயது கர்ப்பிணி ஒருவர் கோவையில் இருந்து திருப்பதி இண்டர்சிட்டி ரயிலில் பயணம் செய்தார். ரயில் ஜோலார்பேட்டையை கடந்து சென்று கொண்டிருந்த நிலையில், ரயிலில் உள்ள கழிவறைக்கு கர்ப்பிணி சென்றுள்ளார். அப்போது கே.வி. குப்பம் பகுதியைச் சேர்ந்த ஹேமராஜூ என்பவன் பின் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.
இதனால், அதிர்ச்சி அடைந்த கர்ப்பிணி கூச்சலிட, கர்ப்பிணி என்றும் பாராமல் அந்த பெண்ணை ஹேமராஜூ ரயில் இருந்து கீழே தள்ளியிருந்தார். கர்ப்பிணி கொடுத்த தகவலின் பேரில், விசாரணை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ஹேமராஜூவை அடையாளம் கண்டு கைது செய்து, அவர்மீது 08 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு குறித்து திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
விசாரணைகளுக்கு பின்னர், ஹேமராஜூ குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி தீர்ப்பு விவரங்களை திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் வெளியிட்டு கூறியுள்ளதாவது:
குற்றவாளி ஹேமராஜூக்கு சாகும் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது. ஹேமராஜூக்கு சிறையில் எந்த சலுகையும் வழங்கக்கூடாது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான மருத்துவ சிகிச்சைக்கு உண்டான செலவை அரசே ஏற்க வேண்டும்.
வேலூர் சி.எம்.சி., மருத்துவமனையில் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 1 கோடி இழப்பீடு தர வேண்டும். இந்த தொகையை ரயில்வே சார்பில் ரூ.50 லட்சமும், தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சமும் அளிக்க வேண்டும். என்று தெரிவித்துள்ளது.
English Summary
Convict sentenced to life in prison for pushing pregnant woman off train