56 வயது கள்ளக்காதலனுடன், 51 வயது கள்ளக்காதலி உல்லாசம்.. செலவுக்கு பணம் கேட்டதால் கொலை.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி கியூ பிரிவு காவல் துறையில், சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் முஸ்தபா (வயது 56). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். 

இந்நிலையில், முஸ்தபாவுக்கும் - அங்குள்ள காந்தள் புதுநகர் பகுதியை சார்ந்த மாகி என்ற 51 வயது பெண்மணிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. மாகிக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து கணவர் மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். மாகி சாலையோர உணவக கடை வைத்திருந்த நிலையில், இரவு நேர பணிக்கு செல்கையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கள்ளக்காதல் ஜோடி இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்த நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் தனியாக வீடு எடுத்தும் வசித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று ஊட்டியில் உள்ள விடுதியில் உல்லாசமாக இருந்த நிலையில், முஸ்தபாவிடம் மாகி செலவுக்கு பணம் கேட்டுள்ளார். 

இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் முஸ்தபா மாகியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மாகியின் உடலை முஸ்தபா தனது காரில் ஏற்றி, உடலை கொரோனாவால் இறந்தவர்கள் போல சுற்றி மாகியின் வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். 

அங்கிருந்த உறவினர்களிடம் மாகி கொரோனாவால் உயிரிழந்ததாக நாடகம் ஆடவே, அவர்கள் சடலத்தை சுற்றியிருந்த பாலிதீன் கவரை பிரிகையில் உடலில் காயங்கள் இருந்ததை கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து, ஊட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணை உண்மை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, முஸ்தபாவை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nilgiris Ooty SSI Affair with Woman and Ended Murder 26 June 2021


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal