குழந்தைகள் சாப்பிட்ட கேக்கில் புழு: அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்! நீலகிரியில் அவலம்!
Nilgiris children eaten cake Worm
நீலகிரி மாவட்டத்தின் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் கோத்தகிரி பகுதிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
கோதகிரி பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவர் தனது குழந்தைகளுடன் பொருட்கள் வாங்குவதற்காக மார்க்கெட் சென்று மீண்டும் வீட்டிற்கு நடந்து சென்ற போது அவரது குழந்தைகள் சாப்பிடுவதற்கு கேக் வேண்டும் என கேட்டனர்.
இதனை அடுத்து முனியம்மாள் கோத்தகிரி பேருந்து நிலைய பகுதியில் இருக்கும் பேக்கரிக்குச் சென்று கேக் வாங்கி பின்னர் குழந்தைகளுடன் வீட்டிற்கு சென்று வாங்கி வந்த பார்சலை பிரித்து குழந்தைகளுக்கு கேக் ஊட்டினார்.
குழந்தைகளும் ஆர்வத்துடன் கேக்கை வாங்கி சாப்பிட்டு சில நொடிகளிலேயே ஒரு மாதிரி இருப்பதாக தெரிவித்து கேக்கை வெளியே துப்பி விட்டனர்.
இதனை அடுத்து முனியம்மாள் தான் வாங்கி வந்த கேக்கை எடுத்து பார்த்தபோது கேட்கின் அடிப்பக்கத்தில் பூஞ்சை பிடித்து இருந்தது. மேலும் அதிலிருந்து ஒருவித துர்நாற்றம் வந்ததுடன் அதில் புழுக்களும் இருந்தது தெரிய வந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முனியம்மாள் உறவினர்களுடன் கேக் வாங்கிய கடைக்கு சென்று கடை உரிமையாளரிடம் காண்பித்து இது போன்ற பொருட்களை எதற்காக விற்பனை செய்கிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு கடை உரிமையாளர் இதைக் கொடுத்துவிட்டு புதியதாக வாங்கிச் செல்லுங்கள் என அலட்சியமாக தெரிவித்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
ஆனால் அதிகாரிகள் யாரும் வராததால் பொதுமக்கள் ஆத்திரமடைந்து குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக பொதுமக்கள் தெரிவித்திருப்பதாவது, புழு இருந்த கேக்கை விற்பனை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கும் இதுவரை யாரும் வரவில்லை இது போன்ற பழைய பொருட்கள் பல இடங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.
இதுபோன்ற சம்பவங்களை தடுக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கோத்தகிரி பகுதிக்கு வந்து இங்கு செயல்படும் கடைகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Nilgiris children eaten cake Worm