நீலகிரி வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு..பரபரப்பில் நீலகிரி!! 
                                    
                                    
                                   Nilgiri vote counting place cctv cemara not working
 
                                 
                               
                                
                                      
                                            மக்களவை தேர்தலில் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி இந்தியா முழுவதும் 102 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற முடிந்தது. ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்டவாக்குப்பதிவு நடைபெற்ற முடிந்தது.
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற முடிந்தது. அந்த வகையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் ராசாவும், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எல். முருகனும் போட்டியிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு பெட்டிகள் உதகை காக்க தோப்பு பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பில் 176 கேமராவுடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் பார்க்கும் கேமரா சரியாக வேலை செய்ததால் அரசியல் கட்சி பிரமுகர்கள் இடையே சந்தேகம் எழுந்த நிலையில், சிசிடிவி கேமரா செயல் இழந்துள்ளது உள்ளது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                       Nilgiri vote counting place cctv cemara not working