பெங்களூர் குண்டுவெடிப்பு - தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை.!  - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் குண்டனஹள்ளி பகுதியில், ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகம் இயங்கி வருகிறது. சமீபத்தில் இந்த உணவகத்தில் திடீரென மர்ம பொருள் ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில், உணவக ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என்று பலர் காயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதோடு, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். 

அந்த சிசிடிவியில், மர்ம நபர் ஒருவர் பை ஒன்றை வைத்துவிட்டு செல்வதும், பின்னர் அந்த பை வெடித்துச் சிதறிய காட்சியும் பதிவாகி இருந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், தடயங்களை சேகரித்து, பையை விட்டுச் சென்ற மர்ம நபர் குறித்து விசாரிக்க தொடங்கினர். 

இந்த நிலையில், ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதாவது சென்னை மண்ணடியிலும், ராமநாதபுரத்தில் நான்கு இடங்களிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NIA officers raide in tamilnadu for banglore bomb blast issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->