மதுக்கரை சுங்கச்சாவடியில் புதிய கட்டணம் இன்று முதல் அமல்!
New toll rates at the madukkarai toll plaza come into effect from today
கோவை:மதுக்கரை சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு இன்று (01.08.2025) முதல் புதிய கட்டணம் அமலாகிறது என தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.
கோவையை அடுத்த நீலாம்பூர்-மதுக்கரை 27 கி.மீ பைபாஸ் சாலை, முன்பு எல் அண்டு டி நிறுவனம் பராமரித்தது. தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை அதனை கைப்பற்றி, சாலை வழியாக உள்ள 6 சுங்கச்சாவடிகளில் 5-ஐ மூடி, மதுக்கரை சுங்கச்சாவடியை மட்டும் செயல்பாட்டில் வைத்திருக்கிறது.
இந்தநிலையில் புதிய கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது :இலகுரக வாகனங்கள் (கார், ஜீப், வேன்):
ஒரே பயணம் – ₹35,ஒரே நாளில் திரும்பும் பயணம் – ₹55,மினி பஸ் / இலகு வணிக வாகனங்கள்:ஒரே பயணம் – ₹60,திரும்பும் பயணம் – ₹90 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல பஸ் / டிரக்:ஒரே பயணம் – ₹125,திரும்பும் பயணம் – ₹185,3 அச்சு வணிக வாகனங்கள்:ஒரே பயணம் – ₹135,திரும்பும் பயணம் – ₹200,கனரக கட்டுமான வாகனங்கள்,ஒரே பயணம் – ₹195,திரும்பும் பயணம் – ₹290,7 அல்லது அதற்கு மேற்பட்ட அச்சு வாகனங்கள்:ஒரே பயணம் – ₹235,திரும்பும் பயணம் – ₹350 என புதிய கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் 20 கி.மீ சுற்றளவில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கான வணிகம் அல்லாத வாகனங்களுக்கு ₹350 மாதாந்திர பாஸ்.கோவை மாவட்ட வாகனங்களுக்கு ₹20 முதல் ₹115 வரை தள்ளுபடி கட்டணம்.24 மணி நேரத்தில் திரும்பும் பயணத்திற்கு 25% சலுகை.1 மாதத்திற்குள் ஒரே பயணத்திற்கு 33% தள்ளுபடி என புதிய கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது..
இந்த புதிய கட்டண முறைகள் தேசிய நெடுஞ்சாலை விதிகள், 2008-ன் அடிப்படையில் அமல்படுத்தப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
New toll rates at the madukkarai toll plaza come into effect from today