கோழிப்பண்ணை நடத்த புதிய கட்டுப்பாடு.. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஜனவரி மாதம் கோழிப் பண்ணைகளுக்கான  சுற்றுச்சூழல் வழிகாட்டுதலை வெளியிட்டது. அந்த வழிகாட்டுதல்கள் அனைத்து வகையான கோழிப்பண்ணைகளுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. 

ஒரு இடத்தில் 25 ஆயிரம் பறவைகள் மேல் வளர்க்கும் கோழிப்பண்ணைகள் நீர் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம், காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டம் கீழ் மாநில அரசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து உடனடியாக கோழிப்பண்ணை நிறுவுவதற்கான இசைவாணை மற்றும் கோழிப்பண்ணை செயல்படுவதற்கான இசைவாணை பெற  வேண்டும்.

ஒரே இடத்தில் 5 ஆயிரம் முதல் 25 ஆயிரத்துக்கு குறைவான அல்லது அதற்கு சமமான பறவைகள் வளர்க்கும் கோழிப்பண்ணைகள் வருகின்ற 2023 ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து கோழிப்பண்ணை நிறுவுவதற்கான இசைவாணை மற்றும் கோழி பண்ணை செயல்படுவதற்கான இசைவாணை பெற வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

new regulation to run a poultry farm


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->