புதிய PRTC சார்ஜிங் ஸ்டேஷன்.. பணிகளை ஆய்வு செய்த நேரு MLA !
New PRTC charging station MLA Nehru inspected the works
புதிய PRTC சார்ஜிங் ஸ்டேஷனுக்கு புதிதாக வெங்கடா நகர் துணை மின் நிலையத்திலிருந்து திட்ட மதிப்பு 1 கோடியே 53 லட்சம் செலவில்11 kv புதைவிட மின் கேபிள் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த நேரு MLA
புதுச்சேரி மாநிலம் போக்குவது துறை PRTC மூலம் புதிய மின் பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.மேலும் மின் பேருந்துகளுக்கு மின் சார்ஜ் செய்யும் வகையில் உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட மறைமலை அடிகள் சாலையில் புதிய PRTC சார்ஜிங் ஸ்டேஷனுக்கு புதிதாக வெங்கடா நகர் துணை மின் நிலையத்திலிருந்து திட்ட மதிப்பு 1 கோடியே 53 லட்சம் செலவில்11 kv புதைவிட மின் கேபிள் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
11kv மின் கேபிள் மூலம் கோவிந்தசாலை, குபேர் நகர், கண்டக்டர் தோட்டம் அரசு குடியிருப்பு பகுதி, பாரதிபுரம் மெயின் ரோடு, அந்தோணியார் கோவில் தெரு அரசு குடியிருப்பு பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் இணைப்புகளை வலுப்படுத்தும் வகையில் புதிய கேபிள்கள் அமைய இருப்பதால் கேபிள்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுவதை உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத்தலைவருமான திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் 21.05.2025... இன்று மின் கேபிள்கள் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.
மேலும் பணிகளை விரைந்து முடித்து பகுதி மக்களுக்கு உதவிடுமாறு கேட்டுக் கொண்டார்.... மேலும் ஆய்வின் போது மின்துறை செயற்பொறியாளர் திருமதி.ராஜஸ்ரீ மின்துறைநிலை1உதவிபொறியாளர்திரு.முத்தானந்தம்
மின்துறை இளநிலை பொறியாளர் திரு. சுரேஷ் அவர்கள் மற்றும் மின் துறை அதிகாரிகள் அப்பகுதியை சேர்ந்த மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்கள் பலர் உடன் இருந்தனர்...
English Summary
New PRTC charging station MLA Nehru inspected the works