கள்ளச்சாராயம் உயிரிழப்பு விவகாரம் - விழுப்புரத்தில் புதிய டிஐஜி நியமனம்.! - Seithipunal
Seithipunal


கள்ளச்சாராயம் உயிரிழப்பு விவகாரம் - விழுப்புரத்தில் புதிய டிஐஜி நியமனம்.!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால், அந்த மாவட்டத்தின் எஸ் பி யாக இருந்த ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

இதேபோன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஐந்து பேர் உயிரிழந்துள்ள நிலையில் அம்மாவட்ட எஸ்பியாக  இருந்த பிரதீப் மாற்றப்பட்டு  காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அதிகாரிகளின் பணி மாறுதல் மற்றும் கூடுதல் பொறுப்பு குறித்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவின் பேரில், சிபிசிஐடி டிஐஜியாக இருந்த  ஜியாவுல் விழுப்புரம் டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

காஞ்சிபுரம் எஸ்பியாக இருக்கும் சுதாகருக்கு, செங்கல்பட்டு எஸ்பியாக கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி எஸ்.பியாக இருக்கும் மோகன்ராஜுக்கு, விழுப்புரம் எஸ்.பி-யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

புதிதாக இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் பொறுப்பாக செயல்பட்டு கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தி சட்டம் ஒழுங்கை சரிவர நிர்வகிப்பார்கள் என்று அரசு கருதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new DIG appointed in vilupuram for fake liquor issue


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->