மோடியா? ராகுலா? அரியணை ஏறப்போவது யார்? பிரசாந்த் கிஷோரின் அதிரடி பேட்டி! - Seithipunal
Seithipunal


2019 மக்களவை தேர்தலை விட அதிக தொகுதிகளில் வென்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக பிரபல தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்கும் நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அளித்துள்ள பேட்டியில், "தேர்தல் முடிவு என்னவாக இருக்கும் என்பது பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

என்னைப் பொறுத்த வரையில் இந்த தா தேர்தல் முடிவு பற்றி ஒரே விஷயத்தை தொடர்ந்து கூறி வருகிறேன். அது எனக்கே சலிப்பை ஏற்படுத்துகிறது.

நீங்கள் எப்படி மதிப்பீடு செய்தீர்கள் என்று தெரியவில்லை. பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று நான் சொல்கிறேன்.

பொதுவாக ஆளும் கட்சியின் ஆட்சி மற்றும் அவர்களின் தலைவர்களுக்கு எதிராக களத்தில் எதிர்ப்பு இருந்தால் மட்டுமே மக்கள் அவர்களுக்கு எதிராக வாக்களித்து மாற்றத்தை ஏற்படுத்த நினைப்பார்கள். 

அப்படியான ஒருசூழ்நிலை நம் நாட்டில் எங்கும் நிலவவில்லை. இதுதான் உண்மை. அப்படியே மாற்றாக ராகுல் காந்தி வந்தால் சிறப்பாக இருக்கும் என்று மக்களின் குரலாக நாம் எங்கேயும் கேட்க முடியவில்லை. 

10 ஆண்டுகளில் நாட்டின் கிழக்கு, தெற்கு பகுதியில் பாஜக பெரிய அளவில் வெற்றியை பதிவு செய்யவில்லை. ஆனால், இந்தமுறை பாஜகவின் அந்த இடங்களில் வாக்கு சதவீதம் வெகுவாக அதிகரிக்கும்" என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LS Polls Prashant Kishor say BJP win


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->