BC பட்டியலில் இணைந்த புதிய சாதி.! நிறைவேறிய ஜெ.வின் வாக்கு., அமைச்சருக்கு பாராட்டு.!
New caste join on BC list
புதிதாக ஈழுவா - தீயா ஜாதியினரை பிறப்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்துள்ளனர். இதற்கு பரிந்துரைத்த அமைச்சர் வேலுமணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
தங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அங்கீகரித்து அரசாணை வெளியிட வேண்டுமென்று நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வசித்து வருகின்ற ஈழுவா - தீயா சமூகத்தினர் கடந்த 44 வருடங்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலின் பொழுது, இந்த வேண்டுகோளை ஏற்று பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அவர்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கால முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். இந்நிலையில் அனைத்து மாவட்டங்களில் வாழும் ஈழுவா - தீயா ஜாதியினரை கடந்த ஜூலை 27-ஆம் தேதி பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அங்கீகரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்தார்.
அப்போது, அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான சாதிச் சான்றிதழ் வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று தங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவிக்க பரிந்துரை செய்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு அச்சமூகத்தினர் பாராட்டு விழா நடத்தி உள்ளனர்.
English Summary
New caste join on BC list