நாளை புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் திறப்பு!
New bus stand in Puducherry to open tomorrow
புதிய பேருந்து நிலையம் திறப்பு தள்ளி போனதுக்கு கண்டனன் தெரிவித்து வந்த நிலையில் 02.05.2025... நாளை வெள்ளிக்கிழமை காலை 9:00 மணி அளவில் புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி நகரின் மையப் பகுதியான உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட மறைமலை அடிகள் சாலையில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி அரசு பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதி மூலம்29.50 கோடி செலவில் புதுப்பொலிவுடன் கட்டி முடிக்கப்பட்டுஉள்ளது.இதன் திறப்பு விழா நேற்று அறிவிக்கப்பட்டு ரத்தானது.இதனால் பிரதான எதிர் கட்சிகள் புதிய பேருந்து நிலையம் திறப்பு தள்ளி போனதுக்கு கண்டனன்தெரிவித்தனர்.இந்தநிலையில்02.05.2025...வெள்ளிக்கிழமை காலை 9:00 மணி அளவில் மாண்புமிகு புதுச்சேரி முதல்வர்திரு.N.ரங்கசாமி அவர்கள் தலைமையிலும் உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் முன்னிலையிலும்... மேலும் விழாவின் சிறப்பு விருந்தினர் மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் திருக்கரங்களால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா நடைபெறுகிறது என்று புதுச்சேரி நகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மாநில மனிதநேயமக்கள்சேவைஇயக்கநிறுவனத்தலைவருமான திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்களின் தொடர் முயற்சியின் காரணமாக நாளை திறக்கப்படும் என உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA தெரிவித்துள்ளார்.
English Summary
New bus stand in Puducherry to open tomorrow