தாம்பரம்-திருவனந்தபுரம் இடையே புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் சேவை தொடக்கம்...!
New Amrit Bharat Express service launched between Tambaram and Thiruvananthapuram
ரெயில்வே வாரியம், பயணிகளின் வசதியை மேலும் மேம்படுத்தும் வகையில், தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே புதியதாக “அம்ரித் பாரத்” வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் தமிழகம் – கேரளா இடையேயான நீண்ட தூரப் பயணம் இன்னும் வசதியானதாக மாற உள்ளது.
வண்டி எண் 16121 தாம்பரம் – திருவனந்தபுரம் சென்ட்ரல் அம்ரித் பாரத் வாராந்திர எக்ஸ்பிரஸ், வருகிற 28-ந் தேதி மாலை 5 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரலை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், வண்டி எண் 16122 திருவனந்தபுரம் சென்ட்ரல் – தாம்பரம் அம்ரித் பாரத் வாராந்திர எக்ஸ்பிரஸ், வருகிற 29-ந் தேதி காலை 10.40 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் இரவு 11.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
இந்த ரெயில் செங்கல்பட்டு, அரியலூர், திருச்சி, மதுரை, கோவில்பட்டி, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட முக்கிய நிலையங்கள் வழியாக இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சேவை குறித்து திருச்சி ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
New Amrit Bharat Express service launched between Tambaram and Thiruvananthapuram