சைக்கிளில் உலகத்தை வலம் வரும் நெதர்லாந்து பெண்கள் சென்னை வருகை.! - Seithipunal
Seithipunal


நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டமைச் சேர்ந்தவர் கரோலின் வேன்டிஸ். இவர் தன்னுடன் பள்ளியில் படித்த நெதர்லாந்து நாட்டு தோழிகள் 10 பேருடன்  சேர்ந்து, பல்வேறு நாடுகளுக்கு சென்று மக்களின் வாழ்தார நிலைமை, அங்குள்ள குழந்தைகளின் கல்வி முறைகள் குறித்து விசாரணை செய்து அடித்தட்டு நிலையில் உள்ள குழந்தைகளை கண்டுபிடித்து கல்வி உதவி செய்து வருகிறார். 

மருத்துவர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், தொழில் நுட்ப வல்லுனர்களாகவும் உள்ள இந்த 10 பேருக்கும் திருணமாகி கணவன், மகன், மகள்கள், பேரக்குழந்தைகளுடன் ஒரு குடும்பமாக அந்நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் உலகம் முழுவதும் ஒவ்வொரு நாடாக சென்று சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 

அந்த வகையில், இந்திய நாட்டில் தமிழகத்தை தேர்வு செய்து அதன் படி, அவர்கள் சென்னைக்கு வந்தனர். இதையடுத்து, சென்னையில் இருந்து சைக்கிள் மூலம்  கிழக்கு கடற்கரை சாலை வழியாக சைக்கிள் பயணத்தை தொடங்கி, மாமல்லபுரம், புதுச்சேரி, சேலம் வழியாக மதுரையில் தங்கள் பயணத்தை முடிக்கின்றனர். 

இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது, "வழிதோறும் மக்களின் வாழ்வாதார நிலையையும், அவர்களுடைய குழந்தைகளின் கல்வி முறைகள் குறித்து விசாரணை செய்து, அடித்தட்டு நிலையில், கல்வி பயில முடியாத வசதி இல்லாத ஏழை குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுக்கு உதவி செய்ய உள்ளதாகவும், தற்போது தான் முதன் முதலாக தமிழகத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்கள். 

மேலும், தமிழக மக்களின் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளதாகவும், இங்குள்ள சுற்றுலா தலங்களில் உள்ள புராதன சின்னங்கள், பொழுதுபோக்கு மையங்கள் ரசிப்பதற்கும், பார்ப்பதற்கும் மிக அழகாக உள்ளதாகவும், தமிழகம் வந்தது நல்ல வாய்ப்பாகும்.

ஒரு நாளைக்கு 100 கிலோ மீட்டருக்கு சைக்கிள் ஓட்டுவோம். எங்களுக்கு களைப்பு என்பதே வராது. ஓட்டல்களில் சாப்பிட்டு எங்கள் உடல்நலத்தை கெடுத்து கொள்ள விரும்பவில்லை. அதனால் தான் உணவுப்பொருட்கள், கியாஸ் சிலிண்டர்கள், சமையல் கலைஞருடன் நடமாடும் ஓட்டல்போன்று ஒரு வேனும் எங்கள் உடன் வருகிறது. 

இவர்கள் பயணம் செய்துகொண்டிருக்கும் போது வழியில் ஏதாவது ஒரு விடுதியில் தங்குவோம். அப்போது எங்களுக்கு நடமாடும் சமையல் வேனில், இருந்து சமையல் கலைஞர் ஒருவர் இட்லி, பூரி, பொங்கல, தோசை என்று விதவிதமாக தமிழக உணவுகளை சமைத்து கொடுக்கிறார். அதனை நாங்கள் விரும்பி சாப்பிடுகிறோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

netharland womans come to chennai in cycle


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->