5 மணிவரை கெடு! வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த மாவட்ட தேர்தல் அதிகாரி! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் செலவினங்களை நாள்தோறும் செலவின பார்வையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். 

அதன்படி தேர்தல் செலவினங்களை சமர்ப்பிக்காத நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் 14 வேட்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.

14 வேட்பாளர்களும் தங்கள் தேர்தல் செலவு என கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என அந்த நோட்டீஸில் குறிப்பிட்டு இருந்தது.

இதில் ஒரு சில வேட்பாளர்கள் தேர்தல் செலவினங்களை சமப்பித்துள்ள நிலையில், மீதமுள்ள வேட்பாளர்களுக்கு கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று மாலை 5 மணிக்குள் கணக்கை தாக்கல் செய்யாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 NELLAI ELECTION OFFICER WARN TO CANDIDATES


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->