நிலவில் அணுமின் நிலையம்...! 2036 இலக்குடன் ரஷ்யாவின் விண்வெளி அதிரடி...!
nuclear power plant Moon Russia space initiative 2036 target
ரஷியாவின் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘ராஸ்காஸ்மோஸ்’ உலக விண்வெளி அறிவியலில் புதிய மைல்கல்லை பதிக்கத் தயாராகியுள்ளது.
பூமியின் இயற்கை துணைக்கோளான நிலவில், 2036-ஆம் ஆண்டுக்குள் அணுமின் நிலையம் அமைக்கும் திட்டத்தை ராஸ்காஸ்மோஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், நிலவில் உருவாகவுள்ள இந்த அணுமின் நிலையம், எதிர்கால விண்வெளி ஆராய்ச்சிக்கு தேவையான நிலையான மின்சார ஆதாரமாக செயல்படுவதுடன், சர்வதேச நிலவு ஆராய்ச்சி நிலையம் (International Lunar Research Station) அமைப்பதற்கான முக்கிய அடித்தளமாக இருக்கும் என ராஸ்காஸ்மோஸ் தெரிவித்துள்ளது.
இந்த திட்டம், மனிதகுலத்தின் நிலவு ஆராய்ச்சியை புதிய கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் புரட்சிகர முயற்சி என்றும், நிலவில் நீண்டகால மனித தங்கலுக்கு வழிவகுக்கும் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
English Summary
nuclear power plant Moon Russia space initiative 2036 target