நீர் மோர் பந்தல் திறப்பு விழா..அமைச்சர் நமச்சிவாயம் பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி பழங்களை வழங்கினார்!
Neer Mor Pandal Opening Ceremony Minister Namasivayam distributed buttermilk and watermelons to the public
புதுச்சேரி உழவர்கரை தொகுதி கம்பன் நகரில் பாஜக செயலாளர் சரவணன் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி பழங்களை வழங்கினார்.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில தினங்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள பழச்சாறு கடைகளிலும். தர்பூசணி கடைகளிலும் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் மக்களை வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பல்வேறு கட்சி சார்பில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு இலவசமாக நீர், மோர், பழங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதுச்சேரி உழவர்கரை தொகுதியில் பாஜக மாநில செயலாளர் சரவணன் தலைமையில் மக்களின் நலனுக்காக நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கம்பன் நகர் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தல் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மோர் மற்றும் தர்பூசணி உள்ளிட்ட பழவகைகளை கொடுத்தார். தொடர்ந்து தினந்தோறும் உழவர்கரை தொகுதி முழுவதும் இலவச நீர் மோர் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது. நிகழ்வில் பாஜக நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் பலர் இருந்தனர்.
English Summary
Neer Mor Pandal Opening Ceremony Minister Namasivayam distributed buttermilk and watermelons to the public