கல்லூரி வாசலில் போதை மாத்திரை விற்ற நான்கு பேர் கைது.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதைக் குறைப்பதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஓ.சி.ஐ.டி. என்ற தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதை மாத்திரைகள் விநியோகம் செய்யப்படுவதாக மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி திருச்சியில் உள்ள ஒ.சி.ஐ.டி. தனிப் படையினர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். 

அப்போது, ஒரு கல்லூரியின் வாசல் முன்பு வாலிபர்கள் சிலர் நின்று கொண்டு கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விநியோகம் செய்வதை கண்டுபிடித்தனர். இதை பார்த்த தனிப்படை போலீசார் கல்லூரி முன்பு போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டிருந்த நான்கு பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். 

அதில், போதை மாத்திரை வெளியூரில் இருந்து கொண்டுவரப்படுவதும், அதனை கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவரின் உதவியுடன் விற்பனை செய்யப்படுவதும் தெரிய வந்தது. மேலும், மாணவர்கள் போதை மாத்திரை வாங்கியவுடன் அதற்கான பணத்தை கையில் கொடுக்காமல் ஆன்லைனில் ஒரு எண்ணிற்கு கூகுள்பே செய்ய வேண்டுமாம். 

அப்படி செய்யப்பட்ட அந்த பணம் ஒரு குறிப்பிட்ட நபருக்கு சென்ற பிறகுதான் போதை மாத்திரையை கும்பல் மாணவரிடம் கொடுப்பார்கள் என்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near trichy four youths arrested for drugs tablet sales in college students


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?
Seithipunal
--> -->