பெண்களுக்கு செல்போனில் தொல்லை கொடுத்த ஊழியர்.! போலீசார் கைது.!  - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஜெயா நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக பேசியதுடன், அவரது செல்போனிற்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆபாச படங்களையும் வீடியோக்களையும் அனுப்பியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், வீடியோகால் செய்தும் அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மனா உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் இந்த சம்பவம் குறித்து திருவள்ளூரில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதன் படி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி உள்ளிட்டோரின் உத்தரவின் படி, சைபர் கிரைம் துணை தலைமை காவலர் மனோஜ் பிரபாகர் தாஸ் மற்றும் சக போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.

அதன் பின்னர், அந்தப் பெண்ணிற்கு வந்த செல்போன் எண்ணை வைத்து போலீசார் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இந்த செல்போனை பயன்படுத்தி வருவதாக தெரிய வந்தது. அதன் படி, சைபர் கிரைம் போலீசார் திருப்பூருக்கு சென்று அந்த மர்ம நபரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

இதையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பிடிப்பட்ட நபர், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் என்.ஜி.ஆர். ரோடு பகுதியை சேர்ந்த சிவா என்பதும், அவர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு இனிப்பு கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. 

மேலும், இதுவரை திருமணம் ஆகாத சிவா கீழே கிடந்த ஒரு சிம் கார்டை எடுத்து பயன்படுத்தி இது போன்று சுமார், 10-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆபாசமாக பேசியதாகவும், அவரது எண்ணுக்கு வீடியோ மற்றும் படங்களை அனுப்பி தொல்லை கொடுத்தும் வந்துள்ளார்.

பின்னர், போலீசார் சிவாவை கைது செய்து அவரிடம் இருந்த செல்போனை கைப்பற்றினர். மேலும் போலீசார் அவரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near tiruvallur man disturb womans in mobile phone


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->