திருப்பூர் : ரேஷன் அரிசியை ஆம்னி வேனில் கடத்திய நபர் கைது.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயத்தில் நியாயவிலைக் கடை அரிசியை பதுக்கி வைத்து வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக திருப்பூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 

அந்த தகவலின் படி, சார்பு ஆய்வாளர் கார்த்தி மற்றும் போலீசார் காங்கேயம் அருகில் உள்ள லட்சுமி நகர் இரண்டாவது வீதியில் சந்தேகத்தின் அடிப்படையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்ததில் ஆயிரத்து 115 கிலோ ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  

அந்த விசாரணையில், அவர் காங்கேயம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பது தெரியவந்தது. மேலும், அவர் பொது மக்களிடம் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கள்ள சந்தையில் வடமாநிலத்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது. அதன் பின்னர் போலீசார் வெங்கடேசை கைது செய்து அரிசி மற்றும் ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near tirupur ration rice kidnape amni van


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->