திருப்பூர் || முறைகேடாக செயல்பட்ட கிளினிக்.! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொங்கு மெயின் ரோடு கொடிக்கம்பம் பகுதியில் தனியார் கிளினிக் ஒன்று தகுந்த ஆவணங்கள் இல்லாமல் செயல்படுவதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்தது. 

அந்த புகார் குறித்து ஆட்சியர் வினீத் உத்தரவின் படி, மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் கனகராணி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் சம்பந்தப்பட்ட கிளினிக்கிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அதன் பின்னர், அங்கிருந்த மருத்துவ ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதில், கிளினிக் ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட மருத்துவர் அங்கு இல்லாமல் சிகிச்சை அளிக்கப்படுவது தெரியவந்தது. 

மேலும், இந்த சம்பவம் குறித்து அங்கிருந்தவர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டதில் அந்த கிளினிக் முறைகேடாக நடத்தப்பட்டது தெரியவந்தது. அதன் பின்னர், அந்தக் கிளினிக் மற்றும் அதன் அருகில் உள்ள மருந்துக்கடை அனைத்தும் மூடப்பட்டது. 

இந்த சோதனைக் குறித்து மருத்துவப்பணிகள் துறை இணை இயக்குனர் கனகராணி தெரிவித்ததாவது:- "புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கிளினிக் மற்றும் மருந்துக்கடையில் விசாரணை நடத்தப்பட்டது. அங்கு பவித்ரா என்ற பெண் மருத்துவர் இருப்பதாக அந்த கிளினிக் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால் அங்கு வேறு ஒரு மருத்துவர் சிகிச்சை அளித்து வருகிறார். இதனால், அவருடைய மருத்துவ தகுதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதில், முதல்கட்டமாக கிளினிக் மற்றும் மருந்தகம் மூடப்பட்டுள்ளது. சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் ஆய்வு நடத்தப்பட்ட பிறகு சீல் வைப்பு உள்ளிட்ட மேல் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near tirupur private clinic close for unofficial run


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->