கம்பராமாயணம் பாடும் மூன்றாம் வகுப்பு மாணவன் - வலைதளத்தில் வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி அருகே ராதாபுரம் கணபதி நகரைச் சேர்ந்தவர்கள் காமராஜ்-கவுசல்யா என்ற தம்பதியினர். விவசாய தொழில் செய்து வரும் இவர்களுக்கு ஸ்ரீ செல்வக்ரிஷ் என்ற ஆண் பிள்ளையும், ஜெஸ்ரீ என்ற பெண் பிள்ளையும் உள்ளனர். 

இவர்கள் இருவரும் ராதாபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களில் சிறுவன் ஸ்ரீ செல்வக்ரிஷ் மூன்றாம் வகுப்பும், சிறுமி ஜெஸ்ரீ ஒன்றாம் வகுப்பும் படிக்கின்றனர். 

இதில், ஸ்ரீசெல்வக்ரிஷ் ஒன்றாம் வகுப்பில் இருந்தே பேச்சு போட்டியில் கலந்து கொண்டு பேசி ஏராளமான பரிசுகளை வாங்கி உள்ளார். அதனால், நிறைய புத்தகங்கள் படிப்பதை சிறுவயதில் இருந்தே பழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஸ்ரீசெல்வக்ரிஷ் தனது வீட்டில் வைத்து கம்பராமாயணம் பாடலை பாடியதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் சிறுவனின் பெற்றோர் வெளிட்டுள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near tirunelveli school student sings in kambaramayanam


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->