திருநெல்வேலி || சாமி சிலையை சேதப்படுத்திய சம்பவம் - மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்..! - Seithipunal
Seithipunal


திருநெல்வெலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள மலையடி புதூரில் ஊய்காட்டு சுடலைமாட சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுடலை, மாசானசுவாமி, பேச்சியம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் எழுந்தருளியுள்ளனர். சுடலை உள்ளிட்ட தெய்வங்களுக்கு தனித்தனியாக கற்சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கோவிலில் ஆண்டு தோறும் ஆனி மாதம் கொடை விழா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று இந்தக் கோவிலில் உள்ள மாசானசுவாமி கற்சிலை கீழே தள்ளப்பட்டு, சேதப்படுத்தப்பட்டுள்ளது. 

இதையறிந்த ஊர்மக்கள் கோவிலுக்கு சென்று சேதமடைந்த சாமி சிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து, கோவில் தர்மகர்த்தா  திருக்குறுங்குடி போலீசில் புகார் அளித்தார். 

அந்த புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த அய்யப்பன் என்பவர் கோவிலை சுற்றி வந்தது தெரியவந்துள்ளது. 

அவர் தான் சாமி சிலையை சேதப்படுத்தினாரா? அல்லது வேறு யாருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தக் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து, சாமி சிலை சேதம் அடைந்ததை கண்டித்தும், இதில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near tirunelveli god statue broke in kalakadu


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->