தேனி அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய கும்பல்.! பெண் உள்பட மூன்று பேர் கைது.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் மெட்டுசாலை மற்றும் பைபாஸ்சாலை சந்திப்பில் மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கம்பத்தில் இருந்து கேரளா நோக்கி ஆட்டோ ஒன்று மிக வேகமாக வந்துள்ளது.

இதைப்பார்த்த போலீசார் அந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதில் நான்கு பேர் இருந்துள்ளனர். இதையடுத்து போலீசார் ஆட்டோவை சோதனை செய்ததில் 5 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்தது. 

இதற்கிடையே ஒருவர் போலீசாரை கண்டதும் ஆட்டோவில் இருந்து தப்பியோடிவிட்டார். இந்த நிலையில் போலீசார் மற்ற மூன்று பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் தப்பியோடிய நபரையும் போலீசார் தேடி வரு கின்றனர். 

இதையடுத்து போலீசார் மூன்று பேரையும் உத்தமபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும், வாகன சோதனையில் கஞ்சா கடத்தியவர்களை கையும் களவுமாக பிடித்த போலீசாருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near theni three peoples arrested for ganja kidnape


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->