தஞ்சாவூர் : நேருக்கு நேர் மோதிய கார் - ஒருவர் உயிரிழப்பு.!
near thanjavur car accident man died
இன்று மதியம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாஞ்சிகோட்டை ஐ.டி.ஐ. அருகே கார் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, தஞ்சை நோக்கி மற்றொரு கார் எதிரே வந்து கொண்டிருந்தது.
அப்போது இரண்டு கார்களும் திடீரென்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த ஒரு நபர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், சிலர் பலத்த காயமடைந்தனர். இதைப்பார்த்த பொதுமக்கள் உடனே ஓடிவந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் பலியான நபர் யார் என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
English Summary
near thanjavur car accident man died