ஆத்தூர் அருகே அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூருக்கு கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்று பெரம்பலூரில் இருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை பெரம்பலூர் மாவட்டம் எசனை பகுதியை சேர்ந்த தெய்வராஜ் என்பவர் ஓட்டி வந்தார். 

இந்த பேருந்தில், வீரகனூரில் இருந்து ஆத்தூர் நோக்கி சீனிவாசன் என்ற கூலித்தொழில் செய்யும் வாலிபர் ஒருவர் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்துள்ளார். அவரை படிக்கட்டில் இருந்து மேலே வருமாறு ஓட்டுநர் சில மணி நேரமாக கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன் பேருந்து ஆத்தூர் லீ பஜார் பகுதிக்கு வந்தவுடன் பேருந்திலிருந்து இறங்கிய சீனிவாசன் கீழே உள்ள கற்களை எடுத்து வீசி பேருந்தின் பின்புற கண்ணாடியை உடைத்துள்ளார். ஆனால், பேருந்தினுள்ளே உள்ள யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக, பேருந்தின் ஓட்டுநர் தெய்வராஜ் ஆத்தூர் டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி, போலீஸ் தலைமை காவலர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர். இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near salem young man arrested for govt bus mirror broke


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->