ராமநாதபுரம் : கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய சொகுசு கார்- அந்தரத்தில் தொங்கிய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய சொகுசு கார்- அந்தரத்தில் தொங்கிய சம்பவம்.!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரபல சுற்றுலாத் தளமான ராமேஸ்வரத்திற்கு தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கார்கள், வேன்கள் மற்றும் பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

அந்த வகையில் இன்று கேரள நம்பர் கொண்ட சொகுசு கார் ஒன்று ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதையடுத்து இந்த கார் வாலாந்தரவை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால், தாறுமாறாக ஓடி தேசிய நெடுஞ்சாலையின் அருகே இருந்த மின்கம்பத்தில் மோதி அதே வேகத்தில் சாலையோரம் இருந்த பெட்டிக்கடையின் மீது ஏறி, மேலே இருக்கும் மின்கம்பியில் தொங்கியது. இந்த சம்பவம் அனைவரையும் அச்சமடையச் செய்தது. 

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அதன் படி அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் முதல்கட்ட விசாரணையில் காரில் இரண்டு நபர்கள் இருந்ததும், கார் விபத்திற்குள்ளான போது அவர்கள் இருவரும் கீழே இறங்கி தப்பி ஓடியதும் தெரிய வந்தது. 

இதையடுத்து போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near rameshwaram car accident two peoples escape


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->