கரூர் || விடுதியில் உணவு சாப்பிட்ட 11 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி அடுத்த காக்காவடி பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பகுதியில் கரூர் மாவட்டம் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் ஏராளமானோர் அந்த பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். 

இந்த பள்ளியில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் சந்தோஷ் பாபு என்ற மாணவன் அங்குள்ள விடுதியில் தங்கி பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். 

இந்நிலையில், நேற்று இரவு மாணவன் சரவணன் வழக்கம் போல் விடுதியில் உணவு வாங்கி சாப்பிட்டார். அதன் பின்னர் சில மணி நேரத்தில் திடீரென்று மயங்கி விழுந்தார். இதை பார்த்த சக மாணவர்கள் விடுதி காப்பாளரிடம் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் உடனடியாக விடுதிக்கு வந்த பள்ளி நிர்வாகத்தினர் அந்த மாணவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவன் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாணவனின் தந்தை சரவணன் மற்றும் அவரது உறவினர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இதையடுத்து. அவர்கள் அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு சென்று தன் மகனுடைய இறப்பில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும், பள்ளி நிர்வாகத்தினரை விசாரணை செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் உயிரிழந்த மாணவன் இரவு உணவு சாப்பிட செல்லும்போது வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. 

இந்த சமத்துவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் தெரிவித்ததாவது, "மாணவனின் உடல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவில் மாணவன் உயிரிழந்ததற்கான உண்மை தெரியும்" என்றுத் தெரிவித்தனர். பள்ளியில் மாணவன் உயிரிழந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near karoor private school student died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->