தலைகீழாக தண்ணீர் குடிக்கும் சுங்கசாவடி ஊழியர்கள்.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமாந்துறை பகுதியில் உள்ள சுங்கச் சாவடிகளில் ஆட்குறைப்பு செய்யப்பட்டதற்கு எதிராக அனைத்து சுங்கச்சாவடி ஊழியர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடியில் வேலை செய்து வந்த இருபத்தெட்டு ஊழியர்களை எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால், கடந்த 30 நாட்களுக்கும் மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன்படி, இன்று ஊழியர்கள் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து மிகவும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு, எங்களுக்குப் பணி வழங்க வேண்டும் என்று கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near kallakurichi tolgate booth staff strike


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->