கோவை : சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் - போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புலியகுளம் பகுதியை சேர்ந்த ஜோஸ்வா என்பவருக்கு ஏற்கனவே மாணவர்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஜோஸ்வாவிற்கு பதினாறு வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதனால், ஜோஸ்வா அந்த சிறுமியை அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி, நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆசை வார்த்தைக் கூறி அந்த சிறுமியை தனது நண்பர்களின் உதவியுடன் வெளியூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.

இதற்கிடையே சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் சிறுமியைக் காணவில்லை என்று புகார் அளித்தனர். அந்த புகாரின் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த விசரணையில், சிறுமியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தது புளியகுலத்தைச் சேர்ந்த ஜோஸ்வா என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். 

மேலும், சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக ஜோஸ்வா மற்றும் அவரது நண்பர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது, நீதிபதி, திருமண ஆசைவார்த்தை கூறி பதினாறு வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கும், அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்களுக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near covai man arrested for kidnape girl and sexuall harassment


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->