பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் அவதி.!
near coimbatore two whealers stop in annur bus stand
கடந்த 2000-ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.
இந்த பேருந்து நிலையத்தில் இருந்து கோவை, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், மற்றும் அவினாசி உள்ளிட்ட முக்கிய பகுதிகள் மற்றும் அன்னூரை சுற்றி உள்ள கிராம பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் என்று சுமார் 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கி வருகின்றது.
இந்த பேருந்து நிலையத்தில் வேலைக்கு செல்வோர் மற்றும் பேருந்து நிலையத்திற்கு வருவோர், அங்குள்ள நடைபாதையில் தங்களது இரு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
இதுமட்டுமல்லாமல், மழைக்காலத்தில் பயணிகள் பேருந்து நிலையத்தின் உள்ளே அமர்வது மற்றும் நிற்பதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மழைக்காலம் என்பதினால் கைக்குழந்தையுடன் பேருந்து நிலையத்திற்கு வரும் தாய்மார்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இந்த விவகாரத்தில், பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக ஈடுபட்டு, இங்கு "வாகனங்களை உள்ளே நிறுத்த அனுமதி இல்லை" என்ற வாசகத்தை எழுதி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
English Summary
near coimbatore two whealers stop in annur bus stand