சென்னையில் ரூ.800 கோடி பணமோசடி.! ஆணிவேராக இருந்த 3 முக்கிய பெண் நிர்வாகிகள் கைது.!
near chennai three womans arrested for 800 rs money fraud
சென்னையில் உள்ள கீழ்பாக்கத்தில் செயல்பட்டு வரும் ஹிஜாவு அசோசியேட்ஸ் என்ற தொழில் நிறுவனம், பல்வேறு தொழில்களை செய்து வருகிறது. இந்த நிறுவனம் சமீபத்தில் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் 15 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்றும், மாதந்தோறும் வட்டிப்பணம் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் என்றும் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அந்த அறிவிப்பை உண்மை என்று நம்பி ஏராளமான பொதுமக்கள், முதலீடு செய்து வந்தனர். ஆனால், அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வட்டி தொகையையும் கொடுக்காமல், அசல் தொகையையும் கொடுக்காமல் நிறுவனத்தை பூட்டி விட்டுச் சென்றது.

இதனால், ஏமாற்றம் அடைந்த வாடிக்கையாளர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி, போலீசார் விசாரணை செய்ததில், பத்து ஆயிரம் பேர்களிடம் ரூ.500 கோடியில் இருந்து ரூ.800 கோடி அளவுக்கு பணத்தை சுருட்டியது தெரிய வந்தது.
இதையடுத்து, போலீசார் இந்த மோசடி தொடர்பாக நிறுவனத்தின் இயக்குனர்கள் உள்ளிட்ட 21 பேர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான நேரு என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களின் வீடுகள் உள்ளிட்ட முப்பத்திரண்டு இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள்.

இதில், வழக்கிற்கு தேவையான முக்கிய ஆவணங்கள் சிக்கிய நிலையில் இந்த வழக்கில் இன்னொரு முக்கிய குற்றவாளியான மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அத்துடன் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மற்ற குற்றவாளிகளில் மூன்று முக்கிய பெண் குற்றவாளிகளை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இவர்கள் மூவரும் பண மோசடி செய்த கம்பெனியில் முக்கிய நிர்வாகிகளாக பதவி வகித்தனர். மேலும் இவர்கள், பணமோசடி செய்வதற்கு ஒரு முக்கிய ஆணிவேராக இருந்து வந்துள்ளனர்.
English Summary
near chennai three womans arrested for 800 rs money fraud