அரசியல் செய்ய வேறு வழியில்லாமல் மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர் - முதலமைச்சர் பேச்சு.! - Seithipunal
Seithipunal


இன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவாண்மியூரில் முப்பத்தொன்று ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றதுடன் அவர்களுக்கு சீர்வரிசைப் பொருட்களையும் வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் முதலாமஸார் ஸ்டாலின் பேசியதாவது, 

"இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு நடைபெற்ற இந்த திருமண விழாவில் கலந்துகொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி. அமைச்சர் சேகர் பாபு ஒரு செயல் பாபு என்று பல இடங்களில் நான் கூறியுள்ளேன்.

இதுவரை அமைச்சர்களை முதலமைச்சர் வேலை வாங்குவதை தான் பார்த்து இருக்கிறோம், ஆனால் முதல்வரையே வேலைவாங்க கூடிய அமைச்சராக சேகர் பாபு இருக்கிறார்.

பக்தர்களுக்கு கோவில்களில் அர்ச்சனையை தமிழ் மொழியில் செய்வதற்காக அனைத்து ஜாதி அர்ச்சகர்களை நியமனம் செய்துள்ளோம். பல கோடி மதிப்புள்ள கோவில் சொத்துக்களை பிடியில் இருந்து மீட்டுள்ளோம். 

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நாம் செய்துள்ள சாதனைகளை பொறுத்துக்கொள்ளமுடியாத சிலர் மக்களிடையே பொய், பித்தலாட்டத்தை பரப்பி வருகிறார்கள். அவர்களுக்கு அரசியல் செய்ய வேறு வழியில்லாமல், மதத்தை வைத்து பழிகளையும், குற்றங்களையும், பரப்புகிறார்கள்.

அனைத்து மக்களுக்குமான அரசாக திமுக அரசு செயல்படுகிறது. ஏழைகளின் சிரிப்பில் இறைவனை கான்பவர்கள் தான் நாம். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற அடிப்படையில், நாம் அனைத்து பணிகளையும் செய்துவருகிறோம். அதன் அடையாளமாக தான் இன்று 31 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்துளோம்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai thirty one couples free marriage function chief minister stalin speach


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->