ரெயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக 7 பேரிடம் பணமோசடி செய்த நபர் கைது.!
near chennai man arrested for money fraud
சென்னையில் உள்ள பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் ஜெயக்குமார். இவர், தனது நண்பர் ரெயில்வே துறையில் வேலைபார்த்து வருவதாகவும், தற்போது ரெயில்வே துறையில் காலி பணியிடங்கள் உள்ளதாகவும் சென்னையை சேர்ந்த ஏழு பேரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை உண்மை என்று நம்பிய அவர்கள் வேலைக்காக ஏழு பேரையும் பல்லாவரத்தில் உள்ள ஒரு இடத்திற்கு தனித்தனியாக வரவழைத்து, அங்கு அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.27 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளார்.
பல நாட்கள் ஆகியும் ஜெயக்குமார் சொன்னபடி அவர்களுக்கு ரெயில்வே துறையில் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால், அந்த ஏழு பேரும் ஜெயக்குமாரை தொடர்ந்து செல்போனில் அழைத்துள்ளனர்.

ஆனால், அவர் அழைப்பை எடுக்கவில்லை. இதனால், ஏமாற்ற மடைந்த 7 பேரும் இந்த மோசடி தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். அதன் படி, போலீசார் மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர், ரெயில்வே துறையில் வேலைவாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட ஜெயக்குமாரை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
near chennai man arrested for money fraud