ஜமாத்தார்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய நாஜிம் MLA !
Nazeem MLA fulfills the long-standing demand of the community
காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ஹிளுருப்பள்ளி ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலில் நடைபாதைமக்கள் பயன்பாட்டிற்கு நமது மாண்புமிகு. A.M.H.நாஜிம், MLA அவர்கள் திறந்து வைத்தார்கள்.
காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ஹிளுருப்பள்ளி ஜாமியா மஸ்ஜித் ஜமாத்தார்களின் நீண்ட நாள் கோரிக்கையான பள்ளிவாசலில் நடைபாதை மற்றும் அங்குள்ள குளத்தை சுத்தம் செய்து புதுப்பித்து தருவது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் காரைக்கால் நகராட்சி மூலம் முதற்கட்ட பணி ரூபாய் 40,00,000/- மதிப்பீட்டில் வண்ணக் கற்களால் ஆன நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று முடிவடைந்து.. வண்ணக் கற்களான நடைபாதையை மக்கள் பயன்பாட்டிற்கு நமது மாண்புமிகு. A.M.H.நாஜிம், MLA அவர்கள் திறந்து வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட பணியான குளம் தூர்வார்வாது மற்றும் குளத்தை சுற்றி நடைபாதைகள் அமைப்பதற்கு ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் உள்ள பணியையும் நமது மாண்புமிகு. A.M.H.நாஜிம், MLA அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வில் காரைக்கால் நகராட்சி உதவி பொறியாளர் திரு. லோகநாதன், இளநிலை பொறியாளர் திரு. சத்தியபாலன், புதுச்சேரி ஹஜ் கமிட்டி தலைவர் திரு. Y. இஸ்மாயில், வக்ஃப் நிர்வாக சபையின் நிர்வாக அதிகாரி திரு. நூருல் ஹசன், டவுன் காஜியார்கள் திரு. எஸ். கே. டி .ஆரிப் மரைக்காயர், திரு. O. கப்பாப்பா, திரு. ஏ. பி. சுல்தான், சமாதான கமிட்டி உறுப்பினர் திரு. பஷீர், முன்னாள் வக்ஃப் நிர்வாக சபையின் முத்தவல்லிகள் மற்றும் அனைத்து பள்ளி ஜமாத்தார்கள் கலந்த கொண்டனர்.
English Summary
Nazeem MLA fulfills the long-standing demand of the community