பயணிகளே! நவராத்திரி special trains: தெற்கு ரெயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு என்ன தெரியுமா...?
Navratri special trains Do you know what important announcement made by Southern Railway
நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தெற்கு ரெயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி, சத்தீஸ்கர் மாநிலம் டோங்கர்கர் ரெயில் நிலையத்தில் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கூடுதல் நிறுத்தம் பெறுகின்றன.

மேலும், பிலாஸ்பூர்- சென்னை சென்ட்ரல் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12851) வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் டோங்கர்கரில் 2 நிமிடங்கள் நிற்கும்.
அதேபோல், சென்னை சென்ட்ரல் – பிலாஸ்பூர் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12852) இன்று முதல் அடுத்த மாதம் அக்டோபர் 1-ஆம் தேதி வரை டோங்கர்கர் நிலையத்தில் 2 நிமிடங்கள் தங்கும்.
இவ்வாறு, நவராத்திரி சிறப்பை முன்னிட்டு தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Navratri special trains Do you know what important announcement made by Southern Railway