இந்தாண்டுக்கான சுதந்திர தின விழாவையொட்டி மூவர்ண கொடி யாத்திரை: பாஜக​வில் மாநில அளவி​லான குழுவை நியமித்துள்ள நயினார் நாகேந்திரன்..! - Seithipunal
Seithipunal


இந்​தாண்டு (2025) சுதந்​திர தினத்​தையொட்டி பல்​வேறு நிகழ்ச்​சிகளை நடத்த பாஜக தேசிய தலை​வர் ஜெ.பி.நட்டா அறி​வுறுத்​தி​யுள்​ளார். அதன்​படி, மூவர்ண கொடியாத்​திரை (திரங்கா), வீடு​தோறும் தேசி​யக் கொடி ஏற்​று​தல் மற்​றும் தூய்​மைப் பணி​களை மேற்​கொள்​ளுதல் என பல்​வேறு நிகழ்ச்​சிகள் ஆக.10-ஆம் தேதி முதல் நடத்த அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

அதன்படி, இந்த மூவர்​ணக் கொடி யாத்​திரை மற்​றும் இதர பணி​களை ஒருங்​கிணைக்க தமிழக பாஜக​வில் மாநில அளவி​லான குழுவை நயி​னார் நாகேந்​திரன் நியமித்​துள்​ளார்.

தமிழகத்​தில் மூவர்​ணக் கொடி யாத்திரை உள்​ ளிட்ட பணி​களை ஒருங்​கிணைக்​க​வும், வழி நடத்​த​வும் மாநில பொதுச் செய​லா​ளர் ஏ.பி.​முரு​கானந்​தம் தலை​மை​யில் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. அந்த குழு​வில், மாநிலச் செய​லா​ளர் அமர்​பிர​சாத் ரெட்​டி, இளைஞர் அணி தலை​வர் எஸ்​.ஜி.சூர்​யா, மகளிர் அணி தலை​வர் கவிதா ​காந்த், ஓபிசி அணி தலை​வர் வீர திரு​நாவுக்​கரசு, முன்​னாள் மாவட்ட தலை​வர்​கள் சுரேஷ்​பாபு, மகாசுசீந்​திரன், தென்​காசி மாவட்ட அமைப்​பாளர் மகா​ராஜன் ஆகியோர் செயல்​படு​வார்​கள் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nainar Nagendran has appointed a state-level committee in the BJP for the tricolor flag procession on the occasion of Independence Day celebrations


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->