லிப்ட் கொடுப்பது போல நடித்து மூதாட்டியிடம் நகை பறித்த மர்ம நபர்கள்..! - Seithipunal
Seithipunal


லிப்ட் கொடுப்பது போல நடித்து மூதாட்டியிடம் நகை பறித்த இளைஞரை  காவதுறையினர் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் நெம்பர் 1 டோல்கேட், உத்தமர்கோவில் பகுதியை சேர்ந்தவர் நளினி (73). தனியே வசித்து வந்த அவர் பழுதடைந்த மிக்சியை சரிசெய்வதற்காக கடைக்கு சென்றுள்ளார்.அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் மூதாட்டிக்கு லிப்ட் கொடுப்பதாக அழைத்து சென்றுள்ளார்.

சிறிது தூரத்தில், இன்னொரு நபர் அந்த வண்டியில் ஏறியுள்ளார். அப்போது, அந்த மூதாட்டியை கடத்தி சென்று மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்துவிட்டு அவரை சாலையோரத்தில் விட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.  அந்த சாலையில் சென்றவர்களிடம் மூதாட்டி இதனை கூறியுளார்.

அவர்கள் காவல்துறையினருக்கு இது குறித்து தகவல் அளித்தனர். விரைந்து சென்ற காவல்துறையினர்மூதாட்டியை ஏமாற்றி கடத்திச்சென்று செயினை பறித்துவிட்டு சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mysterious people who pretended to give a lift and stole jewelry from the grandmother


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->