'சூர்யா 46' படத்தின் இசையமைப்பாளர் யார்? - வெளியானது முக்கிய அறிவிப்பு.!!
music director gv prakash joined surya 46 movie
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சூர்யா தற்போது தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் இந்தப் படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யாவின் 46-வது படம் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இந்தப் படத்தை 'லக்கி பாஸ்கர்' பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார்.
சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 46' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், 'சூர்யா 46' படத்திற்கு இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் இணைந்துள்ளார். மேலும், இது தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் வெங்கி அட்லூரியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
இது இவர்கள் இருவரும் இணையும் 3-வது படமாகும். இதற்கு முன்னதாக, வெங்கி அட்லூரி இயக்கிய 'வாத்தி', 'லக்கி பாஸ்கர்' உள்ளிட்ட படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
music director gv prakash joined surya 46 movie