கொலை, கொள்ளை, காதல் - மூன்றையும் கலந்து செய்த குற்றம்! ஊத்துக்கோட்டை கேஸ் போலீசை அதிர வைத்தது! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளைமேனி கிராமத்தில், 55 வயதான சரஸ்வதி ரெட்டி தனியாக வசித்து வந்தார். கணவர் சுகுணாக்கர் ரெட்டி இறந்தபின், இரு மகன்கள்  சுரேந்தர் (33), மனோஜ் குமார் (29) இருவரும் சென்னையில் தங்கள் குடும்பத்துடன் குடியேறிவிட்டனர்.

வயதான தாய் ஒருவராக இருந்தாலும், அக்கம்பக்கத்தினர் ஆதரவில் இயல்பாகவே வாழ்ந்து வந்தார்.அப்படியிருக்க, இரண்டு நாட்களுக்கு முன்பு மாலை சுமார் 6 மணிக்கு தாய் சரஸ்வதியின் செல்போன் திடீரென ஸ்விட்ச் ஆஃப் ஆனதை கவனித்த சுரேந்தர், அக்கம் பக்கத்தில் வசிக்கும் இளைஞர் கிரண்குமாரை தொடர்பு கொண்டு,“அம்மா போன் ஆஃப்… சென்று பார்க்கிறாயா?” என்று கேட்டார்.

கிரண்குமார் வீட்டுக்குள் நுழைந்த தருணமே, மேல் மாடி படுக்கையறையில் இரத்தக் குளத்தில் சரஸ்வதி உயிரிழந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். அவர் உடனே சுரேந்தருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து ஆய்வு செய்தபோது, சரஸ்வதியின் கழுத்தில் இருந்த 2 பவுன் செயின், வலது கാതில் இருந்த கம்மல், கைபேசி ஆகியவை காணாமல் போய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் அறையில் இரத்தம் படிந்த இரும்புக் கம்பி கிடந்தது. உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.ஆய்வின் போது, கிராமத்திலேயே சென்ட்ரிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த வெங்கடேசன் (26) சம்பவ நேரத்தில் சரஸ்வதியின் வீட்டை சுற்றித்திரிந்ததாக அப்பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

போலீசார் அவரது வீட்டிற்குச் சென்றபோது அவர் மர்மமாக மாயமானார்.இதற்கிடையில், சரஸ்வதியின் திருடு போன செல்போன் சென்னை அமைந்தகரை பகுதியில் சிக்னல் காட்டியது. அங்கு விரைந்து சென்ற போலீசார் நடத்தி வந்த கண்காணிப்பில், அந்தப் போனையே பயன்படுத்தி தனது காதலியுடன் ஆட்டோவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த வெங்கடேசனை சுற்றிவளைத்து பிடித்தனர்.

கடுமையாக விசாரணை செய்தபோது, சரஸ்வதி வீட்டில் தனியாக இருந்ததை பயன்படுத்தி, இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்து, நகைகளையும் கைபேசியையும் பறித்ததாக வெங்கடேசன் ஒப்புக்கொண்டார்.அவரை போலீசார் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறைக்கு அனுப்பினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Murder robbery love crime that mixed all three Uthukottai case shocked police


கருத்துக் கணிப்பு

பிஹார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

பிஹார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்குமா?




Seithipunal
--> -->