காதல் திருமணம்... கழுத்தறுத்து கொலை... பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம்..!  - Seithipunal
Seithipunal


சென்னை செம்மஞ்சேரியில் இருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனியார் மருந்து விற்பனை நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணுடன் முரளிக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

இருவரும் தங்களது பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்துள்ளனர். சோழிங்கநல்லூர் காவல் நிலையத்தில் பெற்றோர்களை அழைத்து பேசி சுமுகமாக முடித்து வைக்கப்பட்டது. கௌசல்யாவின் பெற்றோரும் மனமார முரளியை ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

Image result for murder seithipunal

வழக்கம் போல வேலைக்கு சென்ற முரளி பக்கத்தில் இருக்கும் தன்னுடைய அலுவலகம் டீக்கடையில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது பைக்கில் வந்த ஒருவர் தனியாக பேசவேண்டும் என்று கூறி அழைத்துச் சென்று கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

தனது முன்னாள் காதலியுடன் திருமணத்திற்கு பின்னும் முரளிக்கு தகாத உறவு இருப்பதாகவும், அதனால் தான் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து துரைப்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முரளி கொல்லப்பட்டதற்கு காதல் திருமணம் காரணமா? அல்லது முன்பகை ஏதாவது உள்ளதா? என்று ஆராய்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

murder in chennai semmanjeri


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal