மும்பையை கலக்கிய விருத்தாச்சலம் சின்னபரூர் தாதா திருந்தியது எப்படி?.. வாழ்க்கையை புரிந்துகொண்டது என்று?..! - Seithipunal
Seithipunal


இந்திய பொருளாதாரத்தின் தலைநகரமாக விளங்கும் மும்பையில், அதே அளவிற்கு நிழல் உலக தாதாக்களின் ஆதிக்கம் இருக்கிறது. அந்த வகையில், மும்பையில் தமிழகத்தைச் சார்ந்த பலரும் தாதாக்களாக வலம் வந்தும் இருக்கின்றனர். தூத்துக்குடியை பகுதியைச் சார்ந்த வரதராஜ முதலியார், இராமநாதபுரம் ஷாஜி முஸ்தான் போன்றவர்கள் மும்பையில் தாதாவாக இருந்து வந்துள்ளனர். 

இவர்களை போன்று பெரும்புள்ளிளாக இல்லாமல், குட்டி தாதாவாகவும் பலரும் இருந்து வந்துள்ளனர். விருதாச்சலம் அருகே உள்ள சின்னபரூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணதாசன், கடந்த 1980 ஆம் வருடம் பிழைப்பிற்காக சென்ற தமிழர்களில் இவரும் ஒருவராக இருந்து வந்துள்ளார். 

மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் பணியாற்றி வருகையில், அங்குள்ள ரவுடிகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாளடைவில் ரவுடிகளுக்குள் ஒருவராக களமிறங்கிய கண்ணதாசன், ஹோட்டல் வேலையை விட்டுவிட்டு ரவுடிகளுடன் கைகோர்த்து மாஸ் காண்பித்து வந்துள்ளார். 

அடிதடி, கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து என்று பணம் கொட்ட துவங்கிய நிலையில், கண்ணதாசன் மீது பல வழக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து கடந்த 1989 ஆம் வருடத்தில் அவருக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை பிறப்பித்தது. 

மும்பை சிறையில் பத்து வருடங்கள் கழித்த பின்னர், கைதிகளை சொந்த மாநிலத்திற்கு மாற்றம் செய்யும் சட்டத்தின்படி கடலூர் மத்திய சிறைச்சாலையில் கடந்த 10 வருடமாக இருந்து வந்துள்ளார். இங்கு சுமார் பத்து வருடங்கள் கழிந்த நிலையில் தியானம், யோகா ஆகியவற்றில் ஈடுபட்டு மனதில் நேர்மை போன்ற சிந்தனையை அதிகரித்து இருந்து வந்துள்ளார். 

தன்னை பெற்றெடுத்த பெற்றோரும் வந்து ஆறுதல் கூட சொல்ல வழியில்லாமல் இருந்து வந்த கண்ணதாசன் சிறையில் இருந்து விடுதலையாகி, சொந்த ஊரான சின்னபரூரில் அமைதியாக வாழ்ந்த நிலையில், உறவினர்கள் அவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்து திருமணம் செய்து வைத்துள்ளனர். 

குடும்பத்தை காப்பாற்ற தற்போது தீவிரமாக பணிக்கு சென்று வரும் நிலையில், டிப்டாப்பாக உடையணிந்து தலையில் தொப்பியுடன் வித்தியாசமான கெட்டப்பில் தேநீர் விற்பனை செய்து வருகிறார். விருத்தாசலம் நகரின் பல முக்கிய வீதிகளில் தேநீர் கேனுடன் மும்பையின் குட்டி பாட்ஷா வளம் வருகிறார். மேலும், வன்முறையில் ஈடுபட்டு இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையை இழக்க வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். 

தவறுகள் செய்யாதவர்கள் யாரும் இல்லை. எதனால் அந்த சூழ்நிலைக்கு சென்றோம் என்று மனம் திருந்தி வாழ்வதே, வாழ்க்கையின் அர்த்தம். ஆனால், அந்த ஞான உதயம் கிடைக்க பல பொன்னான வருடங்களை இழக்க நேரிடும். அந்த வருடங்களில் நாம் இழந்ததை யாராலும் மீட்டு கொடுக்க இயலாது என்பதே நிதர்சனம். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumbai Don Kannadhasan become a Tea seller in Virudhachalam Learn what is Life


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->